Headlines

வெலிமட அபரகல தோட்டத்தில் 170 மலையகக் குடும்பங்களுக்கான புதிய கிராமத் திட்டம்: அடிக்கல் நாட்டு விழா!

வெலிமட, அபரகல தோட்டத்தில் 170 மலையகத் தோட்டச் சமூகம் சார்ந்த குடும்பங்களுக்காக, 850 மில்லியன் ரூபாய் செலவில் முழு வசதிகளுடன் கூடிய புதிய கிராமத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (நவம்பர் 06, 2026) இடம்பெறுகிறது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் வீடமைப்பு, மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு விமரிசையாக நடைபெறுகின்றது.

திட்டத்தின் முக்கிய நோக்கங்களும் சிறப்பம்சங்களும்:

  • பேரழிவுகளால் தமது வீடுகளை இழந்த குடும்பங்களுக்கும், அதிக ஆபத்துள்ள மண்டலங்களில் வாழும் குடும்பங்களுக்கும் பாதுகாப்பான நிரந்தர வீடுகளை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளி குடும்பத்திற்கும் 5 மில்லியன் ரூபாய் (ரூ. 50 இலட்சம்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • குறித்த நிதி ஒதுக்கீடானது மூன்று கட்டங்களாக – முறையே 2 மில்லியன் ரூபாய், 1.5 மில்லியன் ரூபாய் மற்றும் 1.5 மில்லியன் ரூபாய் எனப் படிப்படியாக விடுவிக்கப்படவுள்ளது.
  • இத்திட்டத்திற்காக மொத்தம் 05 ஹெக்டேர் நிலப்பரப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், தெரிவுசெய்யப்படும் ஒவ்வொரு பயனாளி குடும்பத்திற்கும் 10 பேர்ச்சஸ் காணி உரிமையும் உறுதிப்படுத்தப்படவுள்ளது.

மலையக மக்களின் நீண்டகாலக் கனடாவான முறையான வீட்டு வசதி மற்றும் காணி உரிமையை உறுதிப்படுத்தும் இந்த மக்கள் நலத் திட்டம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *