Headlines

வெளிநாட்டில் பதுங்கியிருந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரௌடி வளைத்துப் பிடிப்பு: இலங்கைக் காவல்துறை அதிரடி!

சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளில் பதுங்கியிருந்து நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு எதிரான சட்டத்தின் பிடி மேலும் இறுகியுள்ளது. அந்த வகையில், தேடப்பட்டு வந்த பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவனான மனோஜ் முத்துக்குமார எனப்படும் ‘கைவாரு முத்து’ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷார்ஜா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இம்முக்கிய குற்றவாளி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தவுடன் சிஐடி அதிகாரிகளால் உடனடியாகக் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டு மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிவிட்டுத் தப்பியோட நினைக்கும் எத்தகைய குற்றவாளிகளையும் சட்டம் விட்டுவைக்காது என்பதை உணர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *