இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (CPC) மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்கியதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் வழங்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்
