Headlines

2026-இல் உலகின் சிறந்த தீவு நாடாகத் தெரிவு செய்யப்பட்டது இலங்கை: பிக் 7 டிராவல் (Big 7 Travel) கௌரவம்!

சர்வதேச பயண வெளியீடான ‘பிக் 7 டிராவல்’ (Big 7 Travel) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், 2026-ஆம் ஆண்டில் உலகின் சிறந்த சுற்றுலாத் தீவாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த 50 தீவுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் தரவரிசைக்கு முக்கிய காரணங்களாக இலங்கையின் 833 மைல் நீளமான கடற்கரைப் பகுதி, கண்ணைக் கவரும் மத்திய மலைநாடு, உலகப்புகழ் பெற்ற தேயிலைத் தோட்டங்கள், செழுமையான கலாசார பாரம்பரியம் மற்றும் வியக்கத்தக்க உயிரியல் பல்வகைமை (biodiversity) ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், யால தேசிய பூங்கா மற்றும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமான சிகிரியா போன்ற அடையாளச் சின்னங்கள், இலங்கை இந்த முதலிடத்தைப் பெறுவதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், உலகின் சிறந்த 50 கடற்கரைகளின் பட்டியலில் உனவடுன கடற்கரை (Unawatuna Beach) 26-வது இடத்தைப் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *