2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (GCE A/L) எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின் ஊடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
2026 உயர்தரப் பரீட்சைக்கான முழுமையான கால அட்டவணையையும் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதில் அனைத்து பாடங்களுக்குமான திகதிகள் மற்றும் நேரங்கள் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பரீட்சார்த்திகள் வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையைப் பார்வையிட்டு, பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னர் தேவையான அனைத்துத் தயாரிப்புகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம்
2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (GCE A/L) எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின் ஊடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
2026 உயர்தரப் பரீட்சைக்கான முழுமையான கால அட்டவணையையும் திணைக்களம் வெளியிட்டுல்லது. இதில் அனைத்து பாடங்களுக்குமான திகதிகள் மற்றும் நேரங்கள் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.