இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் எனப்படும் மூன்றாம் வாசிப்பு இன்று (21) நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளதுடன், டிசம்பர் 14ஆம் திகதி வரை குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரச விடுமுறை நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில், சனிக்கிழமைகள் உட்பட, காலை 9.30 மணிக்கு அமர்வுகள் ஆரம்பமாகும்.
மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதனிடையே, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று (20) 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 157 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 60 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஏழு நாட்கள் விவாதம் நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.
2027ஆம் ஆண்டுக்கான மொத்த அரச செலவினம் 7.933 ட்ரில்லியன் ரூபாவாகவும், வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 1.753 ட்ரில்லியன் ரூபாவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4.5 சதவீதமாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமர்ப்பித்துள்ள மூன்றாவது வரவு செ
