Headlines

வாட்ஸ்அப், பேஸ்புக் பாவனையாளர்கள் கவனத்திற்கு! மெட்டாவின் புதிய ‘Anti-scam’ பாதுகாப்பு வசதிகள்!

பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் மெசன்ஜர் (Messenger) ஆகிய செயலிகளில் புதிய ‘ஆன்டி-ஸ்கேம் டூல்களை’ (Anti-scam Tools) அவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) சேர்த்துள்ளது.

இந்த புதிய அப்டேட் மூலம், மோசடி (Scam) என சந்தேகிக்கப்படும் செய்திகளுக்கு எச்சரிக்கை கொடுப்பது (Warning) முதல், AI மூலம் ஸ்கேமை தானாகவே கண்டறிவது (Detect) வரையில் புதிய அம்சங்கள் கிடைக்க இருக்கின்றன.

கோடிக்கணக்கான பயனர்கள் சமூக ஊடக செயலிகளைத் தினமும் பயன்படுத்துவதால், அதில் ஸ்கேம்களும் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுப்பதற்காக, ஏற்கனவே உள்ள பாஸ்வேர்ட், பாஸ்கீகள், பின் நம்பர் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன், இந்த புதிய Anti-scam டூல்களையும் மெட்டா நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.

புதிய பாதுகாப்பு அம்சங்கள் என்னவென்று பார்க்கலாம்:

1. வாட்ஸ்அப் வார்னிங்ஸ் (WhatsApp Warnings)

வாட்ஸ்அப் வீடியோ கால்கள் மூலம் வாடிக்கையாளர் சேவை அதிகாரி போலப் பேசி, பயனர்களின் ஸ்கிரீனை ஷேர் (Screen Share) செய்யச் சொல்லி, அதன் மூலம் வங்கி விவரங்கள், வெரிபிகேஷன் கோட்கள் போன்றவற்றைத் திருடும் மோசடிகள் நடக்கின்றன.

இதைத் தடுக்க, இனி உங்களுக்குத் தெரியாத நபர்கள் வீடியோ காலில் வந்து, உங்கள் ஸ்கிரீனை ஷேர் செய்ய முயற்சித்தால், வாட்ஸ்அப் உடனடியாக உங்களுக்கு ஒரு வார்னிங் (Warning) காட்டும். இதன் மூலம் நீங்கள் ஆபத்தை உணர்ந்து ஸ்கிரீன் ஷேர் செய்வதைத் தவிர்க்கலாம்.

2. மெசன்ஜர் ஸ்கேம் டிடெக்சன் (Messenger Scam Detection)

உங்கள் கான்டாக்ட்டில் இல்லாத நபர்கள் மெசன்ஜரில் மெசேஜ் அனுப்பும்போது, அது மோசடி மெசேஜா அல்லது சாதாரண மெசேஜா என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். இனி, இந்த ‘ஸ்கேம் டிடெக்சன்’ கருவி, AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் அந்த மெசேஜை அனுப்பிய அக்கவுண்ட்டை ரிவ்யூ செய்யும்.

அந்த அக்கவுண்ட் சந்தேகத்திற்கிடமாக இருந்தால், உங்களுக்கு “Scam Detected” என்று வார்னிங் காட்டப்படும். அதோடு, அந்த அக்கவுண்ட் குறித்துப் புகார் அளிக்கவும் வசதி செய்யப்படும்.

3. பாஸ்கீகள் (Passkeys)

ஜிமெயில், வங்கிச் செயலிகளைப் போலவே, இனி பேஸ்புக், மெசன்ஜர் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றிலும் பாஸ்கீகள் (Passkeys) கொண்டுவரப்படுகிறது. இதை உங்கள் கைரேகை (Fingerprint), முக அடையாளம் (Face ID) அல்லது பின் நம்பர் (PIN) மூலம் செட் செய்து, கூடுதல் பாதுகாப்பைப் பெறலாம்.

4. செக்யூரிட்டி & பிரைவசி செக்கப் (Security & Privacy Checkup)

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ‘செக்யூரிட்டி செக்கப்’ மூலம் உங்கள் பாஸ்வேர்ட்கள் சரியாக உள்ளதா எனப் பார்க்கலாம். அதேபோல, வாட்ஸ்அப்பில் ‘பிரைவசி செக்கப்’ மூலம், உங்கள் நம்பரை யார் குரூப்பில் சேர்க்கலாம், உங்களை யார் தொடர்பு கொள்ளலாம் போன்றவற்றை நீங்களே கட்டுப்படுத்த முடியும்.

இந்த புதிய பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் அடுத்தடுத்த அப்டேட்களில் பயனர்களுக்குக் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *