Headlines

பாதியில் நிறுத்தப்பட்ட வைத்தியசாலை நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க 45 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு; அடுத்த இரு ஆண்டுகளில் பூர்த்தி!

பாதியில் நிறுத்தப்பட்டிருந்த வைத்தியசாலை நிர்மாணத் திட்டங்களை மீண்டும் ஆரம்பித்து பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் 45 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும், இத்திட்டங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, ஸ்தம்பிதமடைந்த திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

பொது நிதியை திறமையாக பயன்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், சுகாதாரத் துறையில் முன்னுரிமைத் தேவைகளை அடையாளம் கண்டு தீர்த்து வைப்பதாகவும் அவர் கூறினார்.

அத்தியாவசிய நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதன் மூலம் வைத்தியசாலை சேவைகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ், முக்கிய வைத்தியசாலைகளுக்கு 3.15 பில்லியன் ரூபாய் செலவில் 16 அதிநவீன இருதய வடிகுழாய் ஆய்வகங்கள் (Cath Labs) வழங்கப்படும்.

வைத்தியசாலைகளுக்கு நவீன சிடி (CT) மற்றும் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேனர்களை வழங்குவதற்கான திட்டங்களும் நடைபெற்று வருகின்றன, அதே நேரத்தில் அடுத்த ஆண்டிற்கான சுகாதாரத் துறையின் மருத்துவ உபகரணத் தேவைகளை மதிப்பிடுவதற்கான தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன, என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *