Headlines

2 மில்லியன் டொலர் மோசடி குற்றச்சாட்டு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்கரிய வழக்கில் சந்தேகநபராக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, செப்டெம்பர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

மேலும், சந்தேகநபரின் பிணை மனு மீதான தீர்ப்பும் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என நீதவான் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்ஷ, இன்றைய வழக்கு விசாரணைக்காகக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னரே, கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *