Headlines

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: விவாதத்திற்குத் தயாராகும் நாடாளுமன்றம்.

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.

எம்.பி. அஜித் பி. பெரேராவின் இந்த அறிவிப்புக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, எதிர்வரும் முதல் நாடாளுமன்ற வாரத்திலேயே அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தான் முன்மொழியவுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையிலேயே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *