Headlines

வெலிகம கப்பரத்தோட்ட பகுதியில் பல கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு: தப்பிய சந்தேகநபர்களுக்கு வலைவீச்சு!

மாத்தறை, வெலிகம கப்பரத்தோட்ட கடற்கரைப் பகுதியில் 100 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் இன்று (15) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் (STF) கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த ஹெரோயின் தொகை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளானது 6 சாக்குகளில் 120 பாக்கெட்டுகளாக அடைக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *