Headlines

சட்டத்தை வளைக்க முயலும் பிக்குகளின் பிடிவாதம்: எழுத்துப்பூர்வமான உறுதியான திகதி வழங்கும் வரை நகராமல் இருக்க முடிவு.

சிறை தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து முடிவு எடுக்க ஒரு மாத காலம் தேவைப்படும் என ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் “சுதந்திர நடைபயணம்” (Nidahase Pada Yathra) பேரணியில் கலந்துகொண்ட மகா சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், அரசாங்கத்தின் இந்த ஒரு மாத கால அவகாசத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ள பிக்குகள், இறுதி முடிவு எடுக்கப்படும் உறுதியான தேதியைக் குறிப்பிட்டு ஜனாதிபதி செயலாளரிடமிருந்து உடனடியாக உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வழங்குமாறு கடுமையாக வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், தமக்கான முறையான உறுதிமொழி அல்லது அறிவிப்பு வழங்கும் வரை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள இடத்தை விட்டு நகராமல் அங்கேயே தங்கியிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் ஆக்ரோஷமாக அறிவித்துள்ளனர்.

சட்டத்தின் மூலம் தண்டனை பெற்ற ஒரு நபரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் இந்தச் சட்டவிரோத மற்றும் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தலைநகரில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அரசாங்கத்தின் நிர்வாகத் தலைமையகத்திற்கு முன்பாக பிக்குகள் மேற்கொண்ட இந்தத் தொடர் முரண்பாடு மற்றும் மிரட்டல் போக்கு ஆகியவை நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு விடுக்கப்பட்டுள்ள நேரடிச் சவாலாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *