Headlines

வானிலை அறிக்கை (13.08.2026): மேல், சபரகமுவ மாகாணங்கள் மற்றும் கண்டி, காலி உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது மழை!

[கொழும்பு], 2026 ஆகஸ்ட் 13:

இலங்கையின் பல பாகங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூட்டியுள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மோசமான வானிலை நிலவும் காலங்களில், பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *