Headlines

அஸ்வெசும’ மற்றும் கொவிட் நிவாரணங்களில் மோசடி? நுவரெலியாவில் 10 பிரதேச செயலகங்களில் விசாரணை.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்த கணக்காய்வுக் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி அநுர குமர திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதனை நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆராச்சி தெரிவித்தார்.

இந்த கணக்காய்வு மாவட்டத்தில் உள்ள அனைத்து 10 பிரதேச செயலக அலுவலகங்களையும் உள்ளடக்கும் என்றும், 2023 முதல் 2026 வரையிலான காலப்பகுதிக்கு இது நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் ‘அஸ்வெசும’ பயனாளிகள் தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக ஆராயப்படும்.

பல்வேறு அரசாங்க நிவாரணக் கொடுப்பனவுகள் தகுதியான பயனாளிகளுக்குச் சரியாக விநியோகிக்கப்பட்டதா என்பதையும் இந்த விசாரணை தீர்மானிக்கும். ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட அனர்த்த உதவி, கொவிட்-19 பேரிடர் காலத்தில் சமுர்த்தி ஊடாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவு, சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரச நிவாரணம் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவுகள் ஆகியவை இதில் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *