முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை மறைத்தமை மற்றும் விசாரணைகளைத் தவறாக வழிநடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வழக்கு நடவடிக்கைகள் தொடர்பிலேயே இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
