Headlines

நவாலையில் உள்ள நந்தா மாலினியின் இல்லத்திற்கு நேரில் சென்ற ஜனாதிபதி; இன்று மாலை நல்லடக்கம்!

மறைந்த மூத்த இசைக்கலைஞர் விசாத் கலாநிதி நந்தா மாலினிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நவாலையில் வைக்கப்பட்டுள்ள காலஞ்சென்ற கலாநிதி நந்தா மாலினியின் இல்லத்திற்கு ஜனாதிபதி நேற்று (21) விஜயம் செய்தார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியிலிருந்து பெருமளவிலான மக்கள் தமக்கு நேசித்த பாடகருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்து வருகின்றனர்.

நந்தா மாலினியின் இறுதிச் சடங்குகள் இன்று (22) மாலை 5.30 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.

இலங்கை இசைத்துறையின் ஜாம்பவான் நந்தா மாலினி, தனது 82 வயதில் நவாலையில் உள்ள தனது வீட்டில் ஆகஸ்ட் 20ஆம் திகதி காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *