Headlines

நீதிமன்ற உத்தரவால் யாழில் சட்டவிரோத கட்டுமானம் அகற்றம்

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்ட உணவகத்தின் அனுமதியற்ற கட்டுமானத்தை அகற்றுவதற்கு யாழ். மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த கட்டுமானம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, மாநகர சபை அதிகாரிகளால் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உணவக உரிமையாளருக்கும் மாநகர சபை அதிகாரிகளுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *