Headlines

அனோஜனின் பெற்றோரைச் சந்தித்தார் ஜனாதிபதி அனுர குமார: சவூதி மன்னருக்கு எழுத்துமூல கோரிக்கை விடுக்க நடவடிக்கை.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவரசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (21) காலை ஜனாதிபதி செயலகத்தில் அனோஜனின் பெற்றோரைச் சந்தித்த ஜனாதிபதி, அவர்களின் மகனுக்கு உதவுவதற்காக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

சட்ட மற்றும் இராஜதந்திர வழிகள் ஊடாக அரசாங்கம் இதற்காகத் தலையீடு செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி சவூதி அரேபிய மன்னருக்கு முறையான எழுத்துமூல இராஜதந்திர கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்தமை உட்பட வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே எடுத்துள்ள உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது குடும்பத்தினருக்கு அறிவித்தார்.

அத்துடன், பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளின் முன்னேற்றத்தை அரசாங்கம் நெருக்கமாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணித்து வருவதாக அனோஜனின் பெற்றோருக்கு அவர் மேலும் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *