Headlines

தென்கொரியாவில் விபத்து: இரு இலங்கையர்கள் உயிரிழப்பு

தென்கொரியாவின் கியோங்கி மாகாணத்திலுள்ள ஹ்வாசோங் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 30 வயதுப் பிரிவைச் சேர்ந்த இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த நவம்பர் 26ஆம் திகதி இரவு 9.10 மணியளவில், பணியை முடித்துவிட்டு தங்குமிடத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

7.5 தொன் லொறியொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட மரத்தினாலான கூரையின் ஒரு பகுதி, லொறிக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த நிலையில் இருவர் மீதும் மோதியுள்ளது.

படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களின் அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் 50 வயதுப் பிரிவைச் சேர்ந்த லொறி சாரதிக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சரக்கு ஏற்றுதல் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிய வாகனக் கமெரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களைப் பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *