2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி பொல்துவ சந்தியில் பாரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக கல்வித்துறை தொழில்சார் நிபுணர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான நாடாளுமன்ற விவாதம் அன்றைய தினம் நடைபெறவுள்ள நிலையில், இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தைக் கல்விக்காக ஒதுக்குவதாக வழங்கப்பட்ட வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால் பல்கலைக்கழக கட்டமைப்பில் நெருக்கடி ஏற்படக்கூடுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 30ஆம் திகதி முதல் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் உள்ளிட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக சுதந்திர தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
