Headlines

தெஹிவளை, ரத்மலானையில் காணி கொள்வனவு விவகாரம்: யோஷித ராஜபக்ஷ மீதான வழக்கு தள்ளிவைப்பு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

பிரதிவாதி தரப்பு சார்பில் முன்னிலையாக வேண்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சுகவீனமுற்றிருந்த காரணத்தினால், வழக்கை ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தெஹிவளை மற்றும் ரத்மலானை பிரதேசங்களில் 73 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித் துண்டுகளை கொள்வனவு செய்ததன் மூலம், யோஷித ராஜபக்ஷ பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் கூறி சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *