முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு (CIABOC) வருகை தந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் ஒன்று தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதற்கமைய, முன்னாள் அமைச்சர் இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகி, கோரப்பட்ட வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
