மெட்ரோ பஸ் சேவையில் (Metro Bus Service) தனியார் துறையினர் பங்கெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஒரு வருடத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மெட்ரோ பஸ்களுக்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பான சட்டங்களின் கீழ் கடுமையான சட்ட நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
தற்போது 100-க்கும் மேற்பட்ட மெட்ரோ பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், பெரும்பாலான தனியார் பஸ் உரிமையாளர்கள் எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும், சில பஸ்கள் தொடர்பில் மாத்திரமே இத்தகைய சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்களையும் உள்ளடக்கவில்லை என்பதை வலியுறுத்திய அமைச்சர், மெட்ரோ பஸ் சேவையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும், அதனுடன் இணைந்து சேவையில் ஈடுபடுமாறும் தனியார் பஸ் இயக்குநர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
