Headlines

சிகிச்சைக்காக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, விசேட மருத்துவ சிகிச்சைக்காக இன்று (09) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு கண் கோளாறு காணப்பட்டதால், நேற்று (08) சிறைச்சாலை மருத்துவ நிபுணரின் பரிந்துரையின் பேரில், மேலதிக பரிசோதனைகளுக்காக அவர் தேசிய கண் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சிறைச்சாலை மருத்துவ நிபுணரின் பரிந்துரையின் அடிப்படையில், அவருக்கு தேசிய கண் வைத்தியசாலையில் விசேட நிபுணரால் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *