முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் தி ஃபுளீட் வசந்த கரன்னகொட மற்றும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றப்பத்திரிகைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) இந்தக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரு சந்கேத நபர்களையும் பிணையில் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
