Headlines

பாராளுமன்ற வளாகத்தை வந்தடைந்தார் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (20) முற்பகல் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார். பாராளுமன்ற வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதி, தற்போது பாராளுமன்ற சபைக்குள் இருப்பதாக செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று, இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக வருகை தந்துள்ளமை இதுவே முதல் முறையாகும். இன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *