Headlines

பிக் பாஸ் தமிழ் சீசன் 10: காமன் மேன் போட்டியாளர்களாக 3 பேர் உள்ளே நுழைந்தனர்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ‘காமன் மேன்’ (Common Man) போட்டியாளர்களாக மூவர் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கான பிரிவில் கலந்துகொள்வதற்காக 1000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், பல்வேறு கட்டத் தேர்வுகளின் பின்னர் இறுதியாக 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் மேடைக்கு வந்திருந்தனர். இந்த 8 பேரில் ஷாமா, முனியம்மா மற்றும் ஜேசன் ஆகிய 3 பேரை மாத்திரம் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார். ஏனைய 5 பேரும் மேடையிலிருந்தே வெளியேற்றப்பட்டனர்.

இதில் முனியம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் தெரிவு செய்யப்படுவார் என ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், தனது மகனே இதற்காக விண்ணப்பித்ததாகவும் முனியம்மா தெரிவித்தபோது, விஜய் சேதுபதி அவரது மகனைப் பாராட்டினார். அத்துடன், முனியம்மாவின் கணவர் அவருக்கு மல்லிகைப் பூ வாங்கி வந்த நிகழ்வும் அரங்கில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜேசனும் தனது பேச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள ஏனைய போட்டியாளர்களும் இவர்களை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். பிக் பாஸ் வீட்டின் உண்மையான ஆட்டம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த காமன் மேன் போட்டியாளர்களின் வியூகங்கள் எவ்வாறு அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *