மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கைது செய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் 8ஆம் திகதி தீபாவளி இரவு, கொழும்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் அவர் செலுத்திய ஜீப் மற்றொரு ஜீப்புடன் மோதியுள்ளது. இரு வாகனங்களும் சேதமடைந்ததாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் செய்தி வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்முரசு பார்வை
சட்டத்தை உருவாக்கும் பொறுப்பில் இருப்பவர்களே சாலை விதிகளை மதிப்பதில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இந்தக் குற்றச்சாட்டை நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கும். அதேவேளை, சம்பவம் குறித்து மனோ கணேசனிடம் விளக்கம் கேட்பதும், பதவியைப் பொருட்படுத்தாமல் பொலிஸார் சட்டத்தைச் சமமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துவதும் நியாயமானதே.
