—வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பு—
கொழும்பு – ஜூலை 9, 2026
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை இருக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
