இலங்கையின் தலைநகரான கொழும்பில் சர்வதேச காத்தாடி திருவிழா (International Kite Festival) மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனால் கொழும்பு நகர வானம் பல்வேறு வடிவங்கள் மற்றும் நிறங்களைக் கொண்ட காத்தாடிகளால் நிரம்பி கண்கொள்ளாக் காட்சியாக மாறியுள்ளது.
இந்த மாபெரும் திருவிழாவில் 1,500 இற்கும் மேற்பட்ட காத்தாடி ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், 30 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 சர்வதேச போட்டியாளர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இது இலங்கையில் வெறுமனே ஒரு போட்டியாக மட்டுமன்றி, ஒரு உலகளாவிய கொண்டாட்டமாக மாறியுள்ளது.
பிரம்மாண்டமான கரடிகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பாரம்பரிய வடிவங்களைக் கொண்ட காத்தாடிகள் வானில் பறக்கவிடப்படுவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவ்வாறான பிரம்மாண்டமான சர்வதேச நிகழ்வுகள் இலங்கையின் சுற்றுலாத்துறையை (Tourism boom) மேம்படுத்துவதிலும், உலகளாவிய ரீதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
