Headlines

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!

—அதிக வெப்பம் காரணமாக அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்—

கொழும்பு – ஜூலை 9, 2026

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று (09) வெப்பச் சுட்டெண் (Heat Index) ‘அவதான நிலை’ (Caution Level) வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைக் கணக்கிட்டு இந்த வெப்பச் சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது.

அதிக வெப்பமான காலநிலையில் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பதும், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து செயற்படுவது தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, பொதுமக்கள் அதிகளவில் நீர் அருந்துமாறும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *