Headlines

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான வழக்கு தொடர்பிலேயே அவர் சாட்சியம் வழங்கவுள்ளார். அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இருந்து இணையவழியாக (Online) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு தனது சாட்சியத்தை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி யாழ்ப்பாண நகரில் நடத்த திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டனர். இந்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முன்வைத்து, அவர் யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு நேரில் செல்வதைத் தவிர்த்து வந்த நிலையில், கொழும்பு நீதிமன்றத்திலிருந்து காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக சாட்சியமளிக்க யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கமையவே குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக அவர் இன்று கொழும்பு நீதிமன்றத்திற்கு சமூகமளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *