கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரை இயங்கும் யாழ் தேவி விரைவு ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
இந்த ரயிலின் நான்கு முதல் வகுப்பு பெட்டிகள் குளிரூட்டப்பட்டுள்ளன. இந்த பெட்டிகளுக்கான இருக்கைகளை முன்கூட்டியே முன்பதிவு செய்யலாம்.
இலங்கை ரயில்வேயின் இருக்கை முன்பதிவு முறைமையின் ஊடாக, seatreservation.railway.gov.lk என்ற இணையத்தளத்தைப் பயன்படுத்தி இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
