இந்த வார ஓடிடி ரிலீஸ்: பிரைமில் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’, KPY பாலாவின் ‘காந்தி கண்ணாடி’!
சென்னை: காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு, இந்த வாரம் பல்வேறு ஓடிடி தளங்களில் பல புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய வெளியீடுகளின் பட்டியல்:
மதராஸி: சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இந்த வெற்றித் திரைப்படம், நேற்று முதல் அமேசான் பிரைம் தளத்தில் ஒளிபரப்பாகிறது.
காந்தி கண்ணாடி: KPY பாலா நாயகனாக அறிமுகமாகும் இப்படம், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று முதல் அமேசான் பிரைமில் வெளியாகிறது.
தி கேம் (The Game): ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ், இன்று முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
சகசம் (Sahasam): மலையாள த்ரில்லர் திரைப்படமான இது, தமிழ் டப்பிங்கில் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நேற்று முதல் கிடைக்கிறது.
