Headlines

அரச வருமானம் 15.3% ஆக அதிகரிப்பு: 2026 ஆம் ஆண்டுக்கான இலக்கு நிர்ணயம்

(பி.ப. 02:40) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் வருமான இலக்குகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

“2026 ஆம் ஆண்டளவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அரச வருமானத்தை 15.3 வீதமாக (15.3%) உயர்த்துவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று ஜனாதிபதி தனது பாதீட்டு உரையில் தெரிவித்தார்.

இந்த இலக்கை அடைவது, நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்கும், பொதுச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கும் இன்றியமையாதது என அவர் மேலும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *