Headlines

இலங்கைக்கு தெற்கே போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தில் 7 பேர் கைது

தேவேந்திரமுனைக்குத் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களைக் கடத்திச் செல்வதாகச் சந்தேகிக்கப்படும் படகொன்றை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளதுடன், ஏழு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகள், சர்வதேச கடல்சார் பங்காளர்களின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட படகும் சந்தேகநபர்களும் தற்போது கரைக்கு அழைத்து வரப்படுவதுடன், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

2025 ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், இதுவரை 116 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும், 2026 ஜனவரி முதல் இதுவரை நான்கு வெளிநாட்டுப் படகுகள் உட்பட 66 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 18 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 379 சந்தேகநபர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் கடல்சார் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *