Headlines

காமன்வெல்த் போட்டிகளில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு தங்கம் வென்றார் ரூமேஷ் தரங்க.

இலங்கையின் 23 வயதான ஈட்டி எறிதல் வீரர் ரூமேஷ் தரங்க பதிரகே, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இதன் மூலம் 20 ஆண்டுகால காமன்வெல்த் தங்கம் வெல்லும் நாட்டின் காத்திருப்பை அவர் முடிவுக்கு கொண்டு வந்தார்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் உள்ள ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இலங்கை நேரப்படி சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) அதிகாலை நிறைவடைந்தது. ரூமேஷ் பதிரகே தனது இரண்டாவது முயற்சியில் ஈட்டியை 89.75 மீற்றர் தூரத்திற்கு எறிந்து பட்டத்தை வென்றார்.

இந்த வெற்றி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை பெறும் ஆறாவது தங்கப் பதக்கம் மற்றும் 2006 ஆம் ஆண்டு பளுதூக்குதல் வீரர் சிந்தன விதானகே வெற்றி பெற்றதன் பின்னர் நாட்டின் முதல் தங்கப் பதக்கம் ஆகும். இது 1950 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் ஆண்களுக்கான 440 யார்டு தடைகளைத் தாண்டும் போட்டியில் டங்கன் வைட் தங்கம் வென்றதன் பின்னர், 76 வருட காலத்திற்குப் பிறகு இலங்கைக்குக் கிடைக்கும் முதல் தடகளத் தங்கப் பதக்கம் ஆகும்.

இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா 85.83 மீற்றர் தூரத்திற்கு எறிந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். இந்தியாவின் மற்றொரு வீரர் யஷ் வீர் சிங் 85.41 மீற்றர் தூரத்திற்கு எறிந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

இந்த வரலாற்றுச் சாதனை, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் பதக்க எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தியது. இதற்கு முன்னதாக, பரா வட்டெறிதல் போட்டியில் (F42-44/F61-64) பாலித பண்டார வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *