Headlines

சபரகமுவ மாகாணம் மற்றும் கண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று (15.08.2026)மழை பெய்யக்கூடும்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி, சபரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (15) அவ்வப்போது மழை பெய்யும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில மழைப் பொழிவுகள் அவ்வப்போது ஏற்படக்கூடும்.

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *