Headlines

அக்டோபர் 6 இல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சுரேஷ் சல்லேவின் வைத்தியர்களுக்கு உத்தரவு.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவுக்கு சிகிச்சையளிக்கும் 10 வைத்தியர்களுக்கு எதிர்வரும் அக்டோபர் 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (02) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுரேஷ் சல்லேவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவக் குழுவில் அங்கம் வகிக்கும் 10 வைத்தியர்களுக்கே கொழும்பு நீதவான் பாசான் அமரசேன இவ்வாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மோஷன் மூலம் முன்வைத்த உண்மைகளை நீதிமன்றம் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *