Headlines

ரூ. 100 மில்லியன் லஞ்சக் குற்றச்சாட்டு: சிறப்பு முவர் பெஞ்ச் விசாரணைக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல்.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு மற்றும் ஊழல் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாாமல் ராஜபக்சவை அக்டோபர் 28 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்களின் போது 100 மில்லியன் ரூபா லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

எயார்பஸ் ஊழல் தொடர்பாக இலஞ்சச் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணைகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகள் இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரே குற்றப்பத்திரிகையாகத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இவ்வழக்கை நிரந்தர முவர் பெஞ்ச் உயர்நீதிமன்றத்தில் (Trial-at-Bar) விசாரிப்பதற்கான அனுமதியைக் கோரி தலைமை நீதிபதிக்கு விண்ணப்பிக்கவுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இதற்கான உரிய கோரிக்கை இன்று அல்லது நாளை தாக்கல் செய்யப்படும் என நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *