Headlines

கறுப்பு ஜூலை கலவரம் குறித்து ஆராய நாடாளுமன்றக் குழு நியமனம்

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவாக ஆராய்வதற்காக 11 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (28) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

கலவரத்தின் விளைவுகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் தொடர்பான பரிந்துரைகளையும் இக்குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *