Headlines

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம்: முதல் போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது இலங்கை!

கொழும்பு: 13ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா, இன்று (30) கோலாகலமாக ஆரம்பமாகிறது. இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் இத்தொடரின் முதல் போட்டியில், இரு அணிகளும் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கௌகாத்தியில் மோதுகின்றன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் 11 குழுநிலைப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளமை, சமரி அதபத்து தலைமையிலான இலங்கை அணிக்குச் சாதகமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக இதுவரை ஆடிய 35 ஒருநாள் போட்டிகளில், இலங்கை 3 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது. இந்த சர்வதேச கிரிக்கெட் தொடர் நவம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *