Headlines

நற்புறவு விஜயம் மற்றும் கூட்டுப் பயிற்சிக்காக கொழும்பு வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களான (PNS) ‘தைமூர்’ (TAIMUR) மற்றும் ‘அஸ்லட்’ (ASLAT) ஆகியன நற்புறவு விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

வருகை தந்துள்ள இக்கப்பல்களை இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரியங்களுக்கமைய வரவேற்றனர்.

PNS தைமூர் கப்பலுக்கு கப்டன் நியாமாத் சயீத் கானும் (Captain Niamat Saeed Khan), PNS அஸ்லட் கப்பலுக்கு கப்டன் நாதிர் மதீன் அப்ரிடியும் (Captain Nadir Mateen Afridi) கட்டளையிடுகின்றனர்.

இதற்கிடையில், இக்கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து கொழும்பு கடற்பரப்பில் ‘லயன் ஸ்டார் V’ (LION STAR V) என்ற இருதரப்பு கடற்படைப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளன என்றும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *