Headlines

ஹட்டன் – கொழும்பு வீதியில் மீண்டும் மண்சரிவு அபாயம்; அவதானமாக பயணிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு அகற்றப்பட்டு, போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (15) அதிகாலை 1.00 மணியளவில் குயில்வத்தை பகுதியில் வீதிக்கு மேல் மண் சரிந்து விழுந்ததில் வீதி முற்றாகத் தடைப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், தற்போது வாகனப் போக்குவரத்திற்காக ஒரு வழிப்பாதை திறக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாகப் பயணிக்கும் சாரதிகள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து இடைக்கிடை மழை பெய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *