Headlines

இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் இலங்கை பங்கேற்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (26) புதுடில்லியில் நடைபெற்றுள்ளது.

இதன்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், பிராந்திய நிலவரம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) 25ஆவது அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.

இன்று (27) புதுடில்லியில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 23 உறுப்பு நாடுகள் மற்றும் 12 கலந்துரையாடல் பங்காளர் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

2023 முதல் 2025 வரை குறித்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்த இலங்கை, பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்திக்கு தொடர்ந்து பங்களிப்பு வழங்குமென இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2025–2027 காலப்பகுதிக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கும் நிலையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியை வலுப்படுத்துவது மாநாட்டின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *