Headlines

இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை A அணி

2026ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண வளர்ந்துவரும் நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய A அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை A அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

கட்டார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய A அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களைப் பெற்றது.

318 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 41.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான லசித் குரூஸ்புல்லே 116 ஓட்டங்களையும், சினெத் ஜயவர்தன 105 ஓட்டங்களையும் பெற்றனர். இருவரும் முதல் விக்கெட்டுக்காக 174 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

நிஷான் மதுஷ்க ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும், அணித்தலைவர் பவன் ரத்நாயக்க 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய சினெத் ஜயவர்தன ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை தோஹாவில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் A அல்லது பங்களாதேஷ் A அணியை இலங்கை A அணி எதிர்கொள்ளவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *