Headlines

சாதாரண தரப் பரீட்சை: டிசம்பர் 2 முதல் தனியார் வகுப்புகளுக்குத் தடை

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் விரிவுரைகளுக்கு டிசம்பர் 2ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை அமுலில் இருக்குமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி கமகே தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3,519 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளன.

2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை கல்வியாண்டு ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *