மாஸ்கோவின் தென்கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள ரஷ்ய எண்ணெய் உற்பத்தியாளரான காஸ்ப்ரோம் நெப்ட் (Gazprom Neft) நிறுவனத்தின் மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையப் பகுதியிலிருந்து கருப்பு புகை எழும்பிய நிலையில், இன்று (18) மக்கள் ஒரு பூங்காவில் நடந்து செல்கின்றனர்.
உக்ரைனிலிருந்து வந்த “பெரிய அளவிலான” ட்ரோன் தாக்குதலை மாஸ்கோ முறியடித்து வருவதாகவும், பல ட்ரோன்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அடைந்ததாகவும் நகரின் மேயர் செர்ஜி சோபியானின் இன்று அதிகாலை தெரிவித்தார்.
