சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் காரணமாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்தே, சிறைச்சாலை அதிகாரிகளினால் நாமல் ராஜபக்ச பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
