Headlines

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி வழக்கு: முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் பெண் ஒருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (10) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் இருவருக்கும் குற்றப்பத்திரிகைகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

குற்றப்பத்திரிகைகள் வாசிக்கப்பட்டு கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இருவரையும் பிணையில் விடுவிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

தங்க முலாம் பூசப்பட்ட சட்டவிரோதத் துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மேலதிக வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *